ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த – போரிஸ் ஜான்சன்.!
இங்கிலாந்தில் ஊரடங்கை ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,181,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,83,868 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 1,493,416 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது.
இங்கிலாந்தில், கொரோனா தொற்றால் சுமார் 21,9,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 31,855 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் முன்னதாக ஊரடங்கை தளர்த்தினால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் பேர் பலியாக வாய்ப்புள்ளது அந்நாட்டின் அறிவியல் ஆலோசகர் கூறிய நிலையில்,இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.