காக்கையை கட்டி போட்ட கொடூரன் ..! சக காகங்கள் சத்தமிட்டு போராட்டம் .. வைரலாகும் வீடியோ ..!

Chicken Shop Owner Ties Crow With Rope Over Its Cawing

ஆந்திர பிரதேசம் : ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் இருக்கும் ஒரு சந்தையில் கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை பிடித்து அதன் காலில் கயிறால் கட்டிப்போட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாடிபாகா பகுதியில் உள்ள சந்தையில், இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள கோழி கறிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், காகங்கள் விடாமல் கரைந்து கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவர் கரைந்த காகங்களை அச்சுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கயிற்றால் கட்டி போட்டுள்ளார்.

இதனால், கட்டப்பட்ட காகத்தின் அலறல் கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில் கூடி பெரும் அளவில் சத்தம் எழுப்பி கரைந்தன. இந்த சத்தத்தை தாங்க முடியாததால் அந்த பகுதியில் கடை வைத்திருப்போர், சந்தைக்கு வந்தவர்கள் என அனைவரும் கோழி கறிக்கடைக்காரரிடம் காகத்தை அவிழ்த்து விடுமாறு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இதனால், அவர் அக்காகத்தின் காலில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், வெளியான இந்த விடீயோவிற்கு கீழ் பலரும் கறிக்கடைக்காரரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்