நடிகர் மாதவன் சுதந்திர தினம் ,ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றுக்கும் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படமும் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ஒருவர் மாதவனிடம் ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வியில்”உங்கள் பின்னால் இருக்கும் இந்து கடவுள் பக்கத்தில் ஒரு சிலுவை உள்ளது. ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்து படங்கள் உள்ளதா ? நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம் என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த மாதவன் உங்களைப் போன்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்த படத்தில் சிலுவை பக்கத்தில் ஒரு பொற்கோவிலின் சிலையை நீங்கள் பார்க்க மறந்து விட்டீர்கள்.அதை பார்த்து இருந்தால் நான் சீக்கிய மதத்துக்கு மாறிவிட்டேன் என கேள்வி கேட்டு இருப்பீர்கள்.
அதில் உள்ள பாதி பொருள்கள் எனக்கு பரிசாக வந்தது என் சிறுவயதில் இருந்து எம் மதமும் சம்மதம் என்ற கருத்து கற்று கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே எல்லா மதத்தையும் என் மதத்தைப் போல மதிப்பேன். இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு . அந்த அன்பை நான் உங்களுக்கு தருகிறேன் என பதிவிட்டு இருந்தார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…