மாடு எங்களுக்கு பிள்ளைங்க… வெளியானது “ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” டிரைலர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் “டம்மி பட்டாசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக ரம்யா பாண்டியன் சூர்யா &ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே “ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார்.
உண்மை சம்வபத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நேரடியாக அமேசான் பிரேமில் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியாகிவுள்ளது. தற்போது அதற்கான டிரைலர் வெளியாகியுள்ளது.
The story of a rural couple & their two bulls that unfolds a tale of an extraordinary events! #RaameAandalumRaavaneAandalum trailer out now!
Watch #RARAOnPrime, Sept 24. @PrimeVideoIN @Suriya_offl #Jyotika @arisilmoorthy @mynnasukumar @krishoffl pic.twitter.com/KvJatWz5cL
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 15, 2021
இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. வரும் 24-ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.