எனது பெயருக்கு பின்னாள் உள்ள கவுண்டர் என்பது என் அடையாளம் அதை நீக்க முடியாது என ட்விட் செய்துள்ளார் செலின் கவுண்டர்.
இந்தியா வம்சாவளியை சேர்ந்த நியூயார்க் பல்கலைக்கழக கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியரான செலின் கவுண்டர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது, தந்தை நடராஜன் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். அமெரிக்காவில் உயர் பதவிக்கு தேர்வு ஆகியுள்ளது தமிழ்நாட்டிற்கும் ஈரோடு மாவட்ட கிராமத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இதனையடுத்து, இவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல், இதற்கு சில சர்ச்சைகளும் எழுந்தது அதாவது, செலினுக்கு பின்னால் இருக்கும் கவுண்டர் பெயர் குறித்து சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதை நீக்கவும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து, இதற்கு பதிலளிக்கும் வகையில், செலின் கவுண்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், நான் பிறப்பதற்கு முன்பு 1970 களின் முற்பகுதியில் எனது தந்தை தனது பெயரை கவுண்டர் என்று மாற்றினார். மேலும், அது என்னுடைய அடையாளத்தின் ஒருபகுதி. நான் திருமணமான பிறகும் கூட என்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. நான் இப்போது அதை மாற்றவில்லை என்று அந்த பதிவில் செலின் கவுண்டர்தெரிவித்துள்ளார்.
My father changed his name to Gounder in the early 1970s before I was born. My name is my name. It’s part of my history and identity, even if some of that history is painful. I didn’t change my name when I got married. I’m not changing it now.
— Céline Gounder, MD, ScM, FIDSA (@celinegounder) November 10, 2020
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…