கொரோனா தடுப்பூசி பணக்காரர்களுக்கு மட்டுமில்லாமல் உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா மட்டும் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தால் அவை போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க கூடாது என்று வாடிகன் தேவாலயத்தின் பொது மக்களிடம் உரையாற்றிய போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், கொரோனாவுக்கான தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலும் அது வருத்தப்பட வேண்டிய விஷயங்களாக இருக்கும் என்றும் கூறினார். எனவே பணக்காரர் என்றில்லாமல் கொரோனா தடுப்பூசி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளதாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக முழுவதையும் முழங்கால்களுக்கு அடியில் வைத்துள்ள இந்த கொரோனா வைரஸ் ஏழைகளின் கடினமான சூழ்திலையையும், உலகில் ஆட்சி செய்யும் பெரும் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…