பெருந்தொகை கொடுத்து மாஸ்டர் படத்துக்கான ஹிந்தி ரீமேக்கை வாங்கிய நிறுவனம்!

Default Image

எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் பெருந்தொகை கொடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வெளி வந்துள்ள மாஸ்டர் படத்துக்கான ஹிந்தி ரீமேக்கை வாங்கியுள்ளது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாகவும், மாளவிகா மோகனன் அவர்கள் கதாநாயகியாகவும் நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் வில்லத்தனம் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாஸ்டர் படத்திற்கு சில எதிர்மறையான கருத்துக்களும் கூறப்பட்டது. ஆனால் படம் வசூல் அதிகளவில் பெற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மாஸ்டர் படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் மிக பெரும் தொகையை கொடுத்து பெற்றுள்ளதாம். இது குறித்து கூறிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிஷேக் அவர்கள், மாஸ்டர் படத்தின் உரிமத்தை வாங்கியதில் மகிழ்ச்சி எனவும், தமிழ் ரசிகர்கள் இந்த படத்திலுள்ள மாயாஜாலத்தினை ரசித்தது போல இந்தி ரசிகர்களும் ரசிக்கும் படியாக உருவாக்க நாங்கள் காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
thiruparankundram
Harbhajan Singh about abhishek sharma
Madurai
music director sam cs
seeman udhayanidhi stalin
Dimuth Karunaratne