இரட்டை அர்த்தத்தில் பேசி காமெடி நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பிரபல சீரியல் நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்.
சினிமாயுலகில் கால் பதித்து நிற்க வேண்டுமென்றால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு அட்ஜஸ்ட் செய்து தான் ஆக வேண்டுமாம் என்று கூறுகிறார்கள் . நடிகைகளை படுக்கையறைக்கு அழைப்பது தற்போதும் நடைமுறையில் இருந்து தான் வருகிறது. அதனையடுத்து மீ டு என்ற அமைப்பு இதற்காக தொடங்கப்பட்டு பல பெண்கள் பல பிரமுகர்களின் பெயரில் புகார் செய்தனர். அதில் பல சினிமா பிரமுகர்களின் பெயர்கள் சர்ச்சையில் சிக்கியது. இந்த நிலையில் பாக்கியராஜ் அவர்களின் வீட்ல விஷேசம்ங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரகதி. அதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார் பிரகதி. அதுமட்டுமின்றி அரண்மனை கிளி போன்ற சின்னத்திரை சீரியலும் நடித்து வருகிறார். இவர் தற்போது டோலிவுட் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்ததாக தெலுங்கு சேனலுடனான உரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது,
பல ஆண்டுகளாக என்னுடன் நல்ல முறையில் பழகி வந்தவர் என்று பெயரை குறிப்பிடாமல் கூறியுள்ளார். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் காலை 11 மணியளவில் அவர் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேச தொடங்கினார். மேலும் வித்தியாசமான முறையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அந்த நேரத்தில் நான் அதை பற்றி எதுவும் பேசாமல் விட்டு விட்டேன். பின்னர் அவரை கேரவனுக்கு அழைத்து சென்று நான் நீங்கள் தவறான அர்த்தத்தில் சிந்திக்க தவறான உடல் அசைவு மொழியை காட்டவோ, தவறாக பேசவோ செய்தேனா என்று அவரிடம் கேட்க, அவர் இல்லை என்றார். பின்னர் பிரகதி நான் உங்கள் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதால் மற்றவர்கள் முன்னால் அவமானப்படுத்தவில்லை என்று கூறி அவரை எச்சரித்ததாக கூறியுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…