இன்று முதல் டப்பிங் பணிகளை துவங்கிய ‘கோப்ரா’ டீம்.!
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் 12 வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த கோப்ரா படக்குழுவினர் இன்று முதல் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.விக்ரம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் மற்றும் மகன் துருவ் விக்ரமுடன் ஒரு படம் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.