பாட்ஷா படத்தினை கைத்தட்டி ரசித்த குழந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி ரஜினி வாழ்த்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.. அவரது ஸ்டைலுக்கு என்றே ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு .அவரது சினிமா வாழ்க்கையில் வசூலில் அள்ளி குவித்த திரைப்படங்களில் ஒன்று பாட்ஷா . கடந்த 1995-ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரும் மாணிக்கம் கேரக்டரிலும், பாட்சா கேரக்டரிலும் நடித்து மிரள வைத்திருப்பார்.
இதில் வரும் அனைத்து பாடல்கள் மட்டுமின்றி ஒவ்வொரு வசனமும் 25 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்றும் அனைவரிடத்திலும் ஒலித்து கொண்டிருக்கிறது . இந்த நிலையில் ரஜினியின் பாட்ஷா படத்தினை சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ரஜினி ” நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான் ,கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ,கைவிட்டுடுவான் என்ற வசனம் பேசிய போது,அதனை பார்த்துகொண்டிருந்த குழந்தை கைத்தட்டி ரசித்தது .
அதனை குழந்தையின் பெற்றோர்கள் வீடியோ எடுத்து ரஜினிகாந்த் அவர்களின் பி.ஆர்.ஓ ரியாஸ் அகமதுவுக்கு அனுப்பி வைக்க , அதற்கு ரஜினிகாந்த் குழந்தைக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும், நன்றி என்று குழந்தையின் பெற்றோருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளனர் . இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர் . அது மட்டுமின்றி இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…