கமலின் மகள் நடிக்க ஆசைப்படும் கேரக்டர்.!

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் இனி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் உலகநாயகனின் மகளான ஸ்ருதிஹாசன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு அண்மையில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனையடுத்து, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர்கள் அவரிடம் இனிமேல் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஸ்ருதிஹாசன், எல்லா கதாபாத்திரத்தில் நடித்து விட்டேன். இனி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் ஸ்ருதிஹாசனை வில்லி வேடத்தில் பார்க்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025