தமிழகத்தில் ‘இ-பதிவு’ பெறுவதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்,திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,’இ-பதிவு’ முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக விண்ணப்பித்ததால்,அவசர காரணங்களுக்கான பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது.
இதனையடுத்து,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தமிழக அரசின் ‘இ-பதிவில்’ திருமணம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.
இந்நிலையில்,தற்போது மீண்டும் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.இதனால்,திருமணம் என்ற காரணத்தை கூறி மாவட்டங்களுக்குள்ளும்,மாவட்டத்திற்கு வெளியே பயணிக்கவும் இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…