கலிபோர்னியா காட்டுத்தீயால் இந்த வருடத்தில் மட்டும் 2 மில்லியன் ஏக்கர் நிலம் எரிந்துள்ளது!
இந்த வருடத்தில் கலிபோர்னியா காட்டுத்தீயால் 2 மில்லியன் ஏக்கர் நிலம் எரிந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவின் காட்டில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயில் காரணமாக மரங்கள் காய்ந்து விடும். அப்போது மின்னல் போன்ற இயற்கைக் காரணிகளாலும், மனிதர்கள் செய்யும் தவறுகளாலும் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலத்துக்கு முன்பு ஏற்பட்ட கலிபோர்னியாவின் காட்டு தீ பல இடங்களில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி 2 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால் சேதமடைந்துள்ளன என கால் ஃபையர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் 1.9 மில்லியன் ஏக்கர் நிலம் எரிந்து உள்ளது. இந்த சாதனையை இந்த வருடம் முறியடித்துள்ளதாக என கால் ஃபையர் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இன்னும் பல நாட்கள் இருக்கும் பொழுது இவ்வளவு தூரம் எறிந்து கொண்டே செல்வதால் தீயணைப்பு வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.