இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.எனவே தான் பிரதமர் மோடி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார் .21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடைய இருந்த நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.