சீனாவில் தற்கொலைக்கு முயன்ற சிறுவன் ..!
சீனாவில் 16 மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுவனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக காப்பாற்றினர்.
கிழக்கு சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அதிகமாக வீடியோ கேம் விளையாடியதை அவனுடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்தச் சிறுவன் 16வது மாடியின் பால்கனியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றான்.
அப்போது அவனுடன் தீயணைப்பு வீரர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மறுபுறம் வந்த தீயணைப்பு வீரர் ஒருவர் திடீரென பாய்ந்து சிறுவனை இறுகக் கட்டிப்பிடித்து காப்பாற்றினார்.
தீயணைப்பு வீரரின் இந்த சாகத்தை இணையம் மூலம் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.