திடீரென வந்த கரடியிடமிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்த சிறுவன்!
எதிர்பாராத நேரத்தில் வந்த கரடியை புத்திசாலித்தனமாக வென்ற சிறுவன் வீடியோ இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.
இத்தாலியில் உள்ள காட்டு பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் நேரத்தை கழிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது தகப்பனும் தாயும் முன்னால் செல்ல அவர்களது மகன் பின்னால் வந்துள்ளான். அவனுக்கு பின்னல் எதிர்பாராத விதமாக கரடி ஒன்று வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் யாரும் அவனை கைப்பற்ற முடியாததால், அவனே பயமில்லாதது போல காட்டி கொண்டு மெதுவாக நடந்து வந்துள்ளான். அசைவின்றி மெதுவாக வந்து, தனது பெற்றோரை அடைகிறான். இதை சிறுவன் தாயார் வீடியோ எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவன் தைரியத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.