நடிகர் டாம் ஹாங்க்ஷிற்கு 8 வயதான கொரோனா டி வ்ரீஸ் என்ற சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவியான ரீட்டா வில்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் சில நாட்களில் குணமடைந்து அமெரிக்காவிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அந்த நடிகருக்கு 8 வயதான கொரோனா டி வ்ரீஸ் என்ற சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உங்களுக்கும், உங்களது மனைவிக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வாயிலாக தெரிய வந்தது, இப்போது நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.
மேலும் எனக்கு என் பெயர் மிகவும் பிடிக்கும், ஆனால் எனது பள்ளியில் உள்ள மாணவர்கள் என்னை கொரோனா வைரஸ் என்று கூறி கிண்டல் செய்வதாகவும் , அதை கேட்டதும் கவலையுடன் சேர்த்து கோவமும் வருகிறது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் அந்த சிறுவனுக்கு டைப் ரைட்டரை பரிசாக அனுப்பி, அதனுடன் உங்களின் கடிதத்தால் நானும் என் மனைவியும் மகிழ்ச்சி அடைகிறோம். நானும் உங்களுக்கு ஒரு நண்பர் தான். இந்த டைப் ரைட்டர் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டு, இதன் மூலம் எனக்கு பதில் கடிதம் அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…