breaking news : மீண்டும் இலங்கையில் கந்தானையில் தேவாலயம் அருகில் குண்டு வெடித்தது
இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி, நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த தொடர் குண்டுகள் வெடித்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 உயிர் இழந்தனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது.மேலும் இன்று காலை விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். இதனால் இலங்கையில் பதற்றம் அதிகமாக நிலவியது.
மேலும் இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டி இருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே வேனில் இருந்த வெடி குண்டுகளை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் முயன்றபோது எதிர்ப்பரவிதமாக ஒரு குண்டு வெடித்தது.