பனிச்சரிவில் சிக்கிய ஐந்தாவது ராணுவ வீரரின் உடல் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது!!!
- கடந்த பிப்ரவரி 20 -ம் தேதி ஷிப்கலா என்ற இடத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. ரோந்துப் பணியில் இருந்த 6 ராணுவ வீரர் உள்பட 7 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.
இமாச்சலப் பிரதேசம் கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவினர்களும் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைப்பிரிவினர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20 -ம் தேதி ஷிப்கலா என்ற இடத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
ரோந்துப் பணியில் இருந்த 6 ராணுவ வீரர் உள்பட 7 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.
இவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த பனிச்சரிவில் 6 வீரர்கள் சிக்கிய நிலையில் ஏற்கனவே 4 பேரின் உடல் மீட்கப்பட்டது.
பனிச்சரிவில் சிக்கிய ஐந்தாவது ராணுவ வீரரின் உடல் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.