ஹெலிகாப்டர் விபத்து : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு!

ebrahim raisi

சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் இன்று வருகை தந்தனர்.

வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர்  மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்புப் படை துறையினர் 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த  இடத்தை கண்டுபிடித்து இந்த தகவலை தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை தேடும் பணியும் நடைபெற்ற நிலையில், தற்போது ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடல் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில்,  யார் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இருப்பினும் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அதன்பிறகு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி  உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு தான் நேரடியாக இறுதிசடங்குக்கு கொண்டு செல்லப்படும்.

பிறகு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி  உடல்  ஈரான் நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக 1 நாள் வைக்கப்படும் எனவும் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகளிலும், ஈரான் அரசு ஈடுபட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்