ஹிமாச்சல் மாநிலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வளாகம் ஒன்றில் பாலிவுட் நடிகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வோஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆசீப் பஸ்ரா. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வந்தார். இந்நிலையில் தமிழில் அஞ்சான் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாகிய இவர், இன்று தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தபடி சடலம் ஒன்று இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த பொழுது அது பிரபல நடிகர் பஸ்ரா என்பது அறிந்து உடனடியாக உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்பாராத இவரது தற்கொலை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீடு ஒன்றில் இவர் வசித்து வந்ததாகவும், அவருடன் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி காதலி என்று கூறி அவருடன் தங்கியிருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் சரியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…