நயாகரா ஆற்றில் இருந்து 101 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த படகு ..!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்ற படகு ஓன்று பாறைகள் இடையே சிக்கியது. இந்த படகில் இரண்டு பேர் இருந்தனர்.அவர்களையும் ,படகையும் மீட்க பல முயற்சிகள் செய்யப்பட்டது.
ஆனால் படகில் இருந்த இரண்டு பேரை மட்டும் கயிற்றின் மூலம் மீட்டனர்.ஆனால் படகை மீட்கமுடியவில்லை. பாறையில் சிக்கிய அந்த படகு 150 அடி ஆழத்தில் சென்றது. கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு பாறைகளில் சிக்கி இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் பாறைககளில் சிக்கியிருந்த படகு நீருக்கு வெளியே வந்தது உள்ளது. அப்பகுதியில் காற்று வேகமாக வீசுவதால் மேலும் படகு இழுத்து செல்லப்படலாம் என நயாகரா நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.
101 ஆண்டுகளுக்கு பிறகு நீரில் இருந்து வெளியே வந்ததால் அந்த படகை ஏராளமான பார்க்க குவிந்து உள்ளனர்.