தனுஷ் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்.?

தனுஷின் 44 படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமை ப்பதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது D44 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று இயக்குனர் பாரதி ராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அடுத்த அப்டேட்டாக படத்தின் டைட்டில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி இரன்டு மாலை 6 மணிக்கு படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.