ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்- கங்கனா ரனாவத் & விஜய்.!
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கங்கனா கங்கனா ரனாவத் “இந்தப் படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம் வாய்ப்பளித்த இயக்குனர் விஜய்க்கு நன்றி. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை மிகப்பெரிய பலம்” என கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து இயக்குனர் விஜய் பேசியது ” தலைவி திரைப்படம் எனது கனவல்ல என்னுடைய குழுவினரின் கனவு. உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. திரையரங்கில் படத்தை கொண்டு வருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஜி வி இதில் துல்லியமான இசையை தந்துள்ளார் இந்தப்படத்தின் ஆத்மாவே அவர்தான்” என தெரிவித்துள்ளார்.