பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்சனுக்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட் !
தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கவின் 5 லட்சத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது தர்சன் இந்த போட்டியில் இருந்து நேற்று வெளியேற்ற பட்டார்.இது அவருடைய ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது தர்சனுக்கு முதல் முறையாக பட வாய்ப்பு கிடைத்துள்ளது.கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் லிப்ரா ப்ரோடுக்ஷன் தர்சனை வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.இதோ அந்த பதிவு ,
Dear #Tharshan Finally your Game has come to an end, But ur Game in Kollywood will start on high note All the best from @LIBRAProduc @sathishmsk @rameshlaus @behindwoods @galattadotcom @igtamil @directorcheran @actress_sanam @cineulagam @itisprashanth #TharshanPeoplesChamp
— LIBRA Productions (@LIBRAProduc) September 29, 2019