உலகிலே மிக பெரிய தேர்தல்!!! 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர் !!!

Default Image
  • முதல் முறையாக இந்தியாவில் நடந்த தேர்தலில் 17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.
  • இந்த நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளில் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் , 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடக்க இருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம்11-ம்தேதி தொடக்கி மே19-ம் தேதி முடிகிறது.இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது.

இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் சுமார் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதால் உலகிலே மிக பெரிய தேர்தல் என்ற பெருமையை இந்த நாடாளுமன்ற தேர்தல் பெற்றுள்ளது.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 85கோடியே 50லட்சம் மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு விபரப்படி இந்தியாவில் 133.97கோடி மக்கள் வசிக்கின்றனர். தற்போது நடக்க இருக்கும் 17-வது நாடாளுமன்ற தேர்தலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் 5கோடியே 5லட்சம் மக்கள்  அதிகரித்து 90 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளில் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் , 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடக்க இருக்கிறது.

முதல் முறையாக இந்தியாவில் நடந்த தேர்தலில் 17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்