குழந்தையின் பெயரை மகிழ்ச்சியுடன் அறிவித்த பிக்பாஸ் பிரபலம்.!

பிக்பாஸ் பிரபலமான நடிகர் டேனியலின் குழந்தையின் பெயரை Kayson Hayes Daniel என்று வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானவர் டேனியல் போப். இவர் அதனையடுத்து கவலை வேண்டாம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், திரி, காத்தாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதற்கிடையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்ட இவர், அதிலிருந்து வெளியேறிய அடுத்த நாளே தனது காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார் .
சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடனான அழகான புகைப்படத்தை வெளியிட்டு, தனது குழந்தையின் பெயரை ‘Kayson Hayes Daniel’ என்று வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy to share , we have named our son “KAYSON HAYES DANIEL” thanks for all your blessings and wishes ???????? pic.twitter.com/zyVp3Go0X4
— Daniel Annie Pope (@Danielanniepope) July 19, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025