திடீர் மாரடைப்பால் காலமான பிக்பாஸ் பிரபலம்.! சோகத்தில் திரையுலகம்.!

பிக்பாஸ் சீசன்-2ல் கலந்து கொண்டு பிரபலமான பாடகர் சோமதாஸ் மாரடைப்பால் காலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கி பிக்பாஸ் சீசன்-2ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் பாடகர் சோமதாஸ் .இவர் போட்டியின் இடையிலே உடல்நல குறைவு காரணமாக வெளியேறினார் .
ஸ்டார் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் அதன் பின் பல படங்களில் பாடல்களை பாடியும், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ரசிகர்களைடையே பிரபலமானார் . இந்த நிலையில் சமீபத்தில் சோமதாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து அதன் பின் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் . இவருக்கு திரையுலக பிரபலங்களும் , பிக்பாஸ் போட்டியாளர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025