தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் பலர் எனக்கு சக்கரை நோய் உள்ளது என்று சொல்லுகிறார்கள். இந்த சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என மருத்துவர் சொன்னாலும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது சிலருக்கு தெரிவதில்லை. அதிலும் 2045 ஆம் ஆண்டில் 20 நபர்களில் பத்து பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயில் இருந்து விடுபடுவதற்கும் நாம் உணவு வகைகள் மூலமாக மருந்து எடுத்துக்கொள்ள முடியும். அவ்வாறு இந்த நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலை நேரத்தில் காளான் ஊத்தப்பம் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்த காலை உணவாக இருக்கும்.
மேலும், சர்க்கரை நோயாளிகள் காலை நேர உணவை தவிர்க்கும் போது இரத்த சர்க்கரை அளவு மிக குறைந்து விடும். எனவே காலை நேர உணவை சரியாக உட்கொள்ள வேண்டும். இதுதான் உடலுக்கு ஆற்றல் வழங்கக்கூடியது. இன்று நாம் காலை நேரத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காளான் ஊத்தப்பம் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் போட்டு தாளிக்கவும். அதன் பின்பு குடைமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் இதனுடன் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து லேசாக கிளறி விட்டு பச்சை வாடை அடங்கியதும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
ஆனால் காளான் முழுவதுமாக வெந்து விடக்கூடாது. அதன் பின்னர் தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவி மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைத்து பின் மீண்டும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிடவும். அட்டகாசமான காளான் ஊத்தப்பம் வீட்டிலேயே தயார். நிச்சயம் சர்க்கரை நோயாளிகளுக்கு இதை செய்து கொடுங்கள். இதில் பல சத்துக்களும் அடங்கியுள்ளது, எனவே காலையில் இந்த உணவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…