சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு …. காளான் ஊத்தப்பம்!

Default Image

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் பலர் எனக்கு சக்கரை நோய் உள்ளது என்று சொல்லுகிறார்கள். இந்த சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என மருத்துவர் சொன்னாலும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது சிலருக்கு தெரிவதில்லை. அதிலும் 2045 ஆம் ஆண்டில் 20 நபர்களில் பத்து பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

எனவே, இந்த சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயில் இருந்து விடுபடுவதற்கும் நாம் உணவு வகைகள் மூலமாக மருந்து எடுத்துக்கொள்ள முடியும். அவ்வாறு இந்த நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலை நேரத்தில் காளான் ஊத்தப்பம் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்த காலை உணவாக இருக்கும்.

மேலும், சர்க்கரை நோயாளிகள் காலை நேர உணவை தவிர்க்கும் போது இரத்த சர்க்கரை அளவு மிக குறைந்து விடும். எனவே காலை நேர உணவை சரியாக உட்கொள்ள வேண்டும். இதுதான் உடலுக்கு ஆற்றல் வழங்கக்கூடியது. இன்று நாம் காலை நேரத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காளான் ஊத்தப்பம் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • காளான்
  • தோசை மாவு
  • குடைமிளகாய்
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • கரம் மசாலா
  • எண்ணெய்

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் போட்டு தாளிக்கவும். அதன் பின்பு குடைமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் இதனுடன் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து லேசாக கிளறி விட்டு பச்சை வாடை அடங்கியதும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

ஆனால் காளான் முழுவதுமாக  வெந்து விடக்கூடாது. அதன் பின்னர் தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவி மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைத்து பின் மீண்டும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிடவும். அட்டகாசமான காளான் ஊத்தப்பம் வீட்டிலேயே தயார். நிச்சயம் சர்க்கரை நோயாளிகளுக்கு இதை செய்து கொடுங்கள். இதில் பல சத்துக்களும் அடங்கியுள்ளது, எனவே காலையில் இந்த உணவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்