சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..?

Default Image

சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தின் நன்மைகள்

சீத்தாப்பழம்:

சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம்.

மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டது, மேலும் சிறுவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகப்படுத்தும் , மற்றும் ஊளை சதையை குறைக்க உதவும் உடல் பருமனாக இருக்கும் நபர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கட்டுப்படுத்தி உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும்.

மேலும் இரத்த சோகை இருப்பவர்கள் இந்த சீத்தாப்பழத்தை சாப்பிட்டுவந்தால் ரத்தத்தை சுத்தமாக்கி சீராக்கி உடலுக்கு நல்ல பலன்களைத் தரும், மேலும் மனநோய் குணமாகும், சீத்தாப்பழத்தை இஞ்சி சாறு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து உடலில் சக்தி கிடைக்கும். உடல் வலிமை பெற திராட்சைப்பழம் சாறுடன் சீத்தாப்பழ சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது ,

தூக்கம் இல்லாதவர்கள் இரவு நேரங்களில் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் நன்றாக துக்கம் கொடுக்கும் இதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் சிறுநீரக பிரச்சனைகள் நீங்கும், மேலும் சீத்தாப்பழத்தை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் நோய் குணமாகும்.

மாம்பழம்:

முக்கனிகளில் முதல் கனி என்றால் மாம்பழம் என்று கூறலாம், சிரியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம், இந்த பலத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்பதை பார்ப்போம்.

இந்த மாம்பழத்தில் வைட்டமின் A சத்து அதிகமாக இருக்கிறது, மேலும் 11% லிருந்து 25% சர்க்கரை சத்துள்ளது, மேலும் இந்த பழத்தில் கேரட்டின் இருப்பதால் தான் மஞ்சளாக இருக்கிறது, இந்த மாம்பழம் பழத்தை சாப்பிட்டால் சளி நோயிலிருந்து விடுபடலாம்.

வைட்டமின் C வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் இந்த பழங்களில் இருப்பதைவிட அதிகமாக மாம்பழம் பழத்தில் உள்ளது, மேலும் வைட்டமின் c நமது உடலில் குறைந்தால் மூட்டுவலி , நரம்பு தளர்ச்சி, தலைவலி, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும், அதனால் மாம்பழத்தை சாப்பிட்டு வந்த இந்த பிரச்னைகளில் விடுபடலாம் என்றே கூறலாம். மேலும் இந்த மாம்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சப்போட்டா பழம்:

சப்போட்டா பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலை கட்டு கோப்பாக வைத்துக்கொள்ளும், மேலும் உடலில் சருமம் மிருதுவாகும், வாரம் இரண்டு முறை தவறாமல் சப்போட்டா பழம் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்.

உடல் சுட்டால் ஏற்படும் மலச்சிக்கல் வாய்ப்புண் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும், இதய நோய் இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும், மேலும் இரவு தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் தூக்கமின்மை தீரும்.

சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோய் வராது சப்போட்டா பழத்தில் வைட்டமின் A அதிகளவில் இருப்பதால் கண்பார்வை சத்து அதிகமாகும், மேலும் சப்போட்டா பழத்தில் எலும்புக்கு தேவையான கால்சியம் அதிகமாக இருப்பதால் உங்களுடைய எலும்புகளை வலிமையாக்கும்.

இந்த சப்போட்டா பழத்தில் முக்கியமான நன்மை இந்த பழத்தை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்,சப்போட்டா சளி மற்றும் இருமலை போக்கும், மேலும் சப்போட்டா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தலையில் பொடுகு மற்றும் பேன் தொல்லை தீரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்