அடுத்தடுத்து அப்டேட்களை அளித்தந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பீஸ்ட் டீம்.!

Default Image

விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகிய மூவரும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிகர் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகிய மூவரும் இணைந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்