பிறந்ததும் மருத்துவர் மாஸ்க்கை இழுக்கும் பச்சிளங்குழந்தை – இணையத்தை கலக்கும் புகைப்படம்!
பிறந்ததும் மருத்துவர் மாஸ்க்கை இழுக்கும் பச்சிளங்குழந்தை, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போதைய காலத்தில் பிறந்த குழந்தைகள் மருத்துவரைப் பார்த்து சிரிப்பதும், முறைப்பது, உடனடியாக நடக்க முயற்சிப்பது என பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்து பிறரை மகிழ்வித்து வருகின்ற நிலையில், துபாயிலிருந்து பிறந்த குழந்தை ஒன்று பிரசவம் பார்த்த மருத்துவர் மாஸ்க்கை கழற்ற முயற்சித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. துபாயில் உள்ள மகளிர் சிறப்பு மருத்துவர் சமீர் செரீப். கொரோனா காலகட்டமாக இருப்பதால் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் முக கவசத்தை அணிந்து தான் வேலை செய்கின்றனர்.
மருத்துவர் சமீர் தான் பிரசவம் பார்க்கும் குழந்தைகளை கைகளில் தூக்கியவாறு புகைப்படம் எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அது போல பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை தனது கைகளால் தூக்கிய போது மருத்துவரின் முகத்தில் இருந்த மாஸ்கை அந்த குழந்தை தனது கையால் இழுத்து உள்ளது. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்து இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மருத்துவர் அனைவரும் மாஸ்க்குக்கு விடை கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனும் வாக்கியத்தோடு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,