உறைய வைக்கும் ஐஸ்கட்டிகளுக்குள் 2 மணி நேரத்திற்கு மேல் நின்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா நபர்.!

Default Image

உறைய வைக்கும் ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 விநாடிகள் வரை நின்று ஆஸ்திரேலியா நபர் சாதனை படைத்துள்ளார்

உலக நாடுகளில் பலர் புதுப்புது விஷயங்களை செய்து சாதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட நேரம் நின்று சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் கோபெர்ல் என்பவர் 200 கிலோ ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் துணிகள் எதுவும் போடாமல் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 விநாடிகள் நின்றுள்ளார்.

இவர் ஏற்கனவே இதே சாதனையை 30 நிமிடங்கள் குறைவாக செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 30 நிமிடங்கள் கூடுதலாக ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் நின்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து ஜோசப் கூறுகையில், நேர்மையான எண்ணங்களை மனதில் நிறுத்தியதாகவும், அதனையடுத்து தன்னை ஒருநிலைப்படுத்தி குளிரை தாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்