இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாட பிரதமர் மோடிக்கு ‘பிடித்த கிச்சடி’யை சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர், அப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஒரு மெய்நிகர் விழாவில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டது.ஆஸ்திரேலியா-இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் 85 சதவீத ஆஸ்திரேலிய பொருட்களுக்கும், 95 சதவீத இந்திய பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்கும்.இரு நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதியை பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடும் வகையில்,ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்,இந்திய பிரதமர் மோடிக்கு ‘பிடித்த கிச்சடி’யை சமைத்து செஃல்பி எடுத்து அப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்காட் மாரிசன் கூறியதாவது, “இந்தியாவுடனான எங்கள் புதிய வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டாடும் வகையில்,எனது நண்பர் பிரதமர் மோடியின் குஜராத் மாநில கறியை சமைத்துள்ளேன்.இதில் பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியும் உள்ளது.இதற்கு எனது மனைவி ஜென்,மகள்கள், அம்மா அனைவரும் அனுமதி கொடுத்தனர்” என தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…