பூமியின் இரவு மற்றும் பகல் இடையே எல்லையைக் காட்டும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விண்வெளி வீரர்.!
பாப் பென்கண் விண்வெளி வீரர் பூமியின் பகல் மற்றும் இரவு இடையே எல்லையைக் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அனைத்து தடைகளையும் கடந்து மே மாதம் வெற்றிகரமாக விண்ணில் சுமார் 19 மணி நேரம் பயணத்தின் பின்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அவர்கள் அங்கு தங்களது வேலையை செய்து கொண்டு வருகிறார்கள் ஏற்கனவே நெருப்பு வளைய சூரிய கிரகணம் புகைப்படத்தை வெளியிட்டனர்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா பாப் பென்கண் அமெரிக்க விண்வெளி வீரர் பூமியில் பகல் மற்றும் இரவு இடையிலான எல்லையைக் காட்டும் இரண்டு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார். “இரவிற்கும் பகலுக்கும் இடையிலான எல்லையைக் கைப்பற்றும் எங்கள் கிரகத்தின் எனக்கு பிடித்த காட்சிகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார. மேலும் டக்ளஸ் ஹார்லி இருவரில் ஒருவர் ஆவார் இவர் ஒரு பதிவை ஏற்கனவே பகிர்ந்துள்ளார். மேற்கு மத்திய அட்லாண்டிக்கில் இன்று இந்த சஹாரா தூசிப் பாதையில் பறந்தோம். இது எவ்வளவு பெரிய பகுதியை கொண்டுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
We flew over this Saharan dust plume today in the west central Atlantic. Amazing how large an area it covers! pic.twitter.com/JVGyo8LAXI
— Col. Doug Hurley (@Astro_Doug) June 21, 2020
My favorite views of our planet that capture the boundary between night and day. pic.twitter.com/Jo3tYH8s9E
— Bob Behnken (@AstroBehnken) June 28, 2020