இன்று பூமியை நோக்கி வரும் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு பெரிய கோள்!
அமெரிக்கா:புர்ஜ் கலிஃபாவின் அளவை விட பெரிய அளவிலான சிறுகோள் ஒன்று இன்று மாலை பூமியை நோக்கி வரும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின்(மிகப்பெரிய கட்டிடம்) அளவை விட பெரிய அளவிலான சிறுகோள்(asteroids) ஒன்று இன்று (ஜனவரி 18) பூமியை நோக்கி வந்து 1,230,000 மைல் தொலைவில் பறக்க உள்ளதாகவும்,1994 PC1 என அழைக்கப்படும் 7482 என்ற சிறுகோள் சுமார் 1.6 கிமீ அகலம் கொண்டது மற்றும் அபாயகரமானது என்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விண்கற்கள் சுமார் 140 மீட்டருக்கும் அதிகமாக இருந்தால், அவை சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 4.6 மில்லியன் மைல்களுக்குள் கொண்டு வரும் சுற்றுப்பாதைகளுடன் இருந்தால்,அவை அபாயகரமானவை என நாசா தெரிவித்துள்ளது.இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 1.3au வானியல் அலகுகளை விட நெருக்கமாக இருப்பதால் இது பூமிக்கு அருகில் உள்ள பொருளாகும்.ஒரு au என்பது 93 மில்லியன் மைல்களுக்குச் சமம்.
அத்தகைய அளவிலான இந்த சிறுகோள் 1994 PC1,பூமியில் பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிந்தாலும்,பூமியிலிருந்து 1.2 மில்லியன் மைல்களுக்கு அப்பால் பாதுகாப்பாக பறக்கும் என்றும் நாசா உறுதியளித்துள்ளது .இது தொடர்பாக நாசா,தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே கூறியிருப்பதாவது:
“பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள் 1994 PC1 (~1 கிமீ அகலம்) மிகவும் நன்கு அறியப்பட்டதாகும்.மேலும் நமது #PlanetaryDefense நிபுணர்களால் பல தசாப்தங்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.உறுதியாக இருங்கள், 1994 பிசி1, ஜன. 18 அன்று நமது கிரகத்தை 1.2 மில்லியன் மைல்களுக்கு அப்பால் பாதுகாப்பாகப் பறக்கும்”,என்று தெரிவித்துள்ளது.
Near-Earth #asteroid 1994 PC1 (~1 km wide) is very well known and has been studied for decades by our #PlanetaryDefense experts. Rest assured, 1994 PC1 will safely fly past our planet 1.2 million miles away next Tues., Jan. 18.
Track it yourself here: https://t.co/JMAPWiirZh pic.twitter.com/35pgUb1anq
— NASA Asteroid Watch (@AsteroidWatch) January 12, 2022
பூமிக்கு ஆபத்தான சிறுகோள் நெருங்கி வருவது இன்று (ஜனவரி 18) மாலை 4.51 மணிக்கும்,இந்திய நேரப்படி (ஜனவரி 19 அன்று அதிகாலை 3.21 மணிக்கும் ) நிகழும் என்று கூறப்படுகிறது.எர்த்ஸ்கையின் கூற்றுப்படி,வானியலாளர்கள் அதன் சுற்றுப்பாதையை கணக்கிட்டுள்ள நிலையில்,இந்த சிறுகோள் குறைந்தது அடுத்த 200 ஆண்டுகளுக்கு இது மிக அருகில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா சமீபத்தில் ஒரு விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது ஏவி அதனை நொறுக்கும் பணியை துவக்கியது,ஒரு மாபெரும் விண்வெளிப் பாறையை தாக்கிய இந்த நிகழ்வு பூமியில் உள்ள உயிர்களை சிறுகோள் அழிப்பதைத் தடுப்பதற்கான ஒரு சோதனை ஓட்டமாக இருந்தது.இந்த நிலையில்,நாசா விண்கலம் நடப்பு ஆண்டில் இந்த சிறுகோளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியுடன் ஒப்பிடும் போது,இந்த சிறுகோள் மணிக்கு 43,754 மைல்கள் (வினாடிக்கு 19.56 கிலோமீட்டர்) வேகத்தில் நகர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.