ரொனால்டோவின் வருகை! அல்-நஸ்ர் கிளப்புக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்.!
ரொனால்டோவின் வருகைக்கு பிறகு, அல்-நஸ்ர் கிளப்-ஐ இன்ஸ்டாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களைப் பெற்றுள்ளது.
போர்ச்சுகல் கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை, சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் 2025ஆம் ஆண்டு வரையிலாக ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ரொனால்டோவின் ஒப்பந்தத்திற்கு பிறகு, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ர், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைப்(ஃபாலோவர்ஸ்) பெற்றுள்ளது.
ரொனால்டோவை ஒப்பந்தம் செய்யும் முன்பு, அல்-நஸ்ஸருக்கு சுமார் 8,00,000 ஃபாலோவர்ஸ்கள் இருந்தனர், ஆனால் தற்போது அல்-நஸ்ஸரின் ஃபாலோவர்ஸ்கள் 6.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இன்ஸ்டாவில் 527 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன், இன்ஸ்டாவில் அதிக மக்களால் பின்தொடரப்படும் நபர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.