இதயத்துடிப்பு நின்று 45 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அமெரிக்க ஹைக்கர்!

Default Image

இதயத்துடிப்பு நின்று 45 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அமெரிக்காவினை சேர்ந்த ஹைக்கர்.

அமெரிக்காவில் உள்ள வுடின்வில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் 45 வயதுடைய மைக்கேல் நாபின்ஸ்கி. இவர் மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் நடப்பதை பழக்கமாக கொண்டவர். இந்நிலையில் அண்மையில் இவர் வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னர் தேசிய பூங்காவில் உள்ள மலைப்பகுதிக்கு நடைபயணம் சென்ற இவர் மீது விமானம் ஏறியதால் படுகாயமடைந்துள்ளார். காணவில்லை என இவர் தேடப்பட்டாலும் ஒரே நாளில் இவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

மருத்துவமனை வருகையிலேயே இவருக்கு இதயத்துடிப்பு மிக லேசாக தான் இருந்துள்ளது. அதன் பின் நின்றுவிட்டது. ஆனால், இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுவில் லேசாக இருந்த துடிப்பு இரண்டாவது முறையாக இவரை உயிர் பெற செய்துள்ளதாக இவருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின் இயந்திரத்தின் உதவியுடன் இவரது இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்குள் செலுத்தியதும் உறுப்புகளில் அசைவு ஏற்பட்டதாம், இரண்டு நாட்களுக்கு பின் அவர் பேசவும் துவங்கியுள்ளார். இது குறித்து சிகிச்சையளித்து மருத்துவர்கள் கூறுகையில் இது அதிசயம் தான் ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளித்த எங்களுக்கு இவர் உயிர் பிழைத்தது மிகவும் சந்தோசம் என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்