பூவரசமரத்தின் அற்புத குணநலன்கள் !!!!!!!!!!!!
பொதுவாக பூவரசமரம் நம் வீடுகளில் பெரும்பான்மையான இடங்களில் இருக்கிறது. ஆனால் அதன் குணநலன்களை பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது.அதை நாம் பெரிதும் எடுத்து பயன்படுத்துவதும் கிடையாது.அதன் குணநலன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
பூவரசமரத்தின் பலன்கள் :
பூவரசம் காயை எடுத்து இடித்து பார்த்தால் லேசான பசபசப்பு தன்மை வாய்ந்த மஞ்சள் நிறச்சாறு வரும். இதை எடுத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கழுத்து பகுதிகளில் செயினால் ஏற்படும் உராய்வு காரணமாக ஏற்படும் கருமையை நீக்க இதைப்போட வேண்டும்.
பூவரசம் பழத்த இலைகளை எடுத்து அரைத்து தலையில் போட்டு வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும் .பூவரசம் பழத்த இலைகளை எடுத்து அரைத்து சருமத்தில் தேய்த்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.கண் கருவளையம் நீங்கும் .சருமம் பொலிவுப்பெறும்.
பூவரசம் பழத்த இலைகளை எடுத்து அரைத்து 1 தேக்கரண்டி சீரகம் கலந்துக் கொதிக்க வைத்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும் .பூவரசம் பழத்த இலைகள் இரும்புச்சத்து மிகுந்தது.இதனை இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தினால் மிகுந்த நன்மை கிடைக்கும்.