பாலில் ஊறவைத்த பேரீச்சம் பழத்தில் உள்ள ஆச்சரியூட்டும் நன்மைகள்…!

Default Image

பாலில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது.

இரண்டு உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உணவு சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பேரீச்சம்பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. பேரிச்சம் பழத்தில் இரும்பு, பொட்டாசியம், செலினியம், மக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சி, புரதம், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.

மேலும் பாலில் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி 12, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பாலில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

ஹீமோகுளோபின் அளவு

இரும்பு சத்து என்பது பேரீச்சையில் காணப்படும் ஒரு முக்கியமான சத்து ஆகும். ஹீமோகுளோபின், இரத்த அணுக்களில் புரத உற்பத்தி செய்வதற்கு இது அவசியம். பேரீட்சை பாலில் ஊறவைக்கப்பட்டு பின்னர்  அதை உட்கொள்ளும் போது, ஹீமோகுளோபின் அளவு 10 நாட்களில் அதிகரிக்கும் என ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் இது இரத்த சோகை பிரச்சனையை போக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள்

ஒரு ஆராய்ச்சியின் படி, பசுவின் பாலில் ஊறவைத்த பேரீட்சை கர்ப்பிணிப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், அவர்களுக்கும் அவர்களின் கருவுக்கும் பல வழிகளில் பயனளிக்கும் என்றும், கருவின் இரத்தம் மற்றும் எலும்பு உருவாக உதவும் என்றும் அறிக்கை கூறுகிறது.

முக அழகு

பேரிட்சை மற்றும் பாலில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. அவை சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளை அகற்ற உதவுகின்றன. மேலும் இவை சரும அழகை மேம்படுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்