அதிமுக துருபிடித்த விவாதத்தை வைத்து குழப்பத்தை உண்டாக்க முடியாது”சு.திருநாவுக்கரசர்..!!
சென்னை, செப்.23- தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குள் அ.தி.மு.க. வால் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., காங் கிரஸைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 25-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு அளித்த உதவிகள் குறித்து முன்னாள் இலங்கை அதிபர் ராஜபட்சே கூறியதை வைத்து அ.தி.மு.க. பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக கூறுகிறது. இலங்கை அதிபர் பொதுவாக கூறியதை மூடி மறைத்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி செய்ததாக கூறுவது தவறு ஆகும்.
கடந்த காலத்தில் இதே குற்றச்சாட்டை கூறிய போது அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, மாநிலங்களவையில், இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்தவிதமான ராணுவ உதவியும் செய்யவில்லை. ஆயுதங்கள், ராணுவ தளவாடங் கள் வழங்கியதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று தெளிவுபடுத்தினார். இதற்குப் பிறகும் துருபிடித்த வாதத்தை அ.தி. மு.க. முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். அ.தி.மு.க.வினர் பொதுக் கூட்டம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்களது நப்பாசை நிறைவேறாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU