தம்பியை காப்பாற்ற போராடிய அக்காவின் பாச போராட்டம்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?
டிசையர் தனது குட்டி தம்பியை காப்பாற்ற இறுதிவரை போராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பாசமும், தைரியமும் அப்பகுதி மக்கள் மத்தியில் அவரை ஹீரோவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஆங்கி ரீட் என்பவருக்கு டிசையர் என்ற 11 வயது மகளும், 6 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் கியான் என்ற குழந்தையும்உள்ளனர். இந்நிலையில், அவரின் வீட்டில் திடீரென தீப்பற்றி உள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், ஆறு வயது மகன் தனது தாயிடம் புகைமூட்டமாக இருப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக அலறியடித்துக்கொண்டு ஆறு வயது மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு அவர் வெளியேறினார் ஆங்கி ரீட். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம், தனது 11 வயது மகள் டிசையர் மற்றும் 8 மாத கைக்குழந்தையை மீட்கும்படி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ஆங்கி ரீட் தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு பக்கத்து அறையில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் மீட்க சென்றுள்ளார். ஆனால் அந்த அறை உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்ததால் அவரால் குழந்தைகளை மீட்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது 8 கைகுழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், குழந்தையும் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது. பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், இந்த 2 குழந்தைகளையும் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது.
ஆனால், டிசையர் தனது குட்டி தம்பியை காப்பாற்ற இறுதிவரை போராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பாசமும் தைரியம் அப்பகுதி மக்களுக்கு அவரை ஹீரோவாக்கி உள்ள நிலையில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வைத்துள்ளது.