மாஸ்டர் படத்தில் மாளவிக்காவுக்கு குரல் கொடுத்தது இந்த தொடரின் நடிகை தானாம்!
மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்துள்ளது, பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸின் நடிகை தனம் அவர்கள் தானாம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி போன்களை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் கதாநாயகியை மாளவிகா மோகன் நடித்திருந்தார். மேலும், வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விமர்சன ரீதியாக சில எதிர்மறையான கருத்துக்களை இப்படம் பெற்றாலும், தற்பொழுது வரை வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியது.
இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி மளவிகாவுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார் எனும் சுவாரஸ்யமான தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அது வேறு யாரும் இல்லை, நம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அண்ணி தனம் தான். சுஜிதா தான் இந்த படத்தில் மளவிகாவுக்கு பின்னணி கொடுத்தவராம். ஆனால், தமிழில் அல்ல, தெலுங்கில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் சுஜிதா தான் டப்பிங் கொடுத்திருக்கிறாராம்.