62 நாள்கள் கொரோனா சிகிச்சைக்கு ரூ. 8,00,00,000 மருத்துவமனை பில்..!
அமெரிக்காவில் 62 நாட்களாக சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 1.12 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.14 கோடி) மருத்துவ கட்டணம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில்இதுவரை கொரோனாவால் 2,142,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 854,106 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பாதிக்கப்பட்டவர்களில் 16,744 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் இவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், அவரின் மருத்துவக் கட்டணம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்காக 70 வயதான ஃப்ளோர் 62 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அதில், 29 நாட்கள் வெண்டிலட்டரில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு 181 பக்கங்கள் கொண்ட ரசீது சீட்டை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துஉள்ளது.
அதில், 1.12 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.14 கோடி) மருத்துவ கட்டணம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.