இளம் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 47வயதான பிரபல தயாரிப்பாளர்.!
மகளின் வற்புறுத்தலின் காரணமாக ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் வைத்து 47 வயதான தில் ராஜூ தன்னை விட 20 வயது குறைந்த நடுத்தர வயது பெண்ணை நேற்றைய முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜூ. இவர் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். இவர் ஃபிடா, நேனு லோக்கல், யவடு, தில், சதமானம் பவதி, ஜானு ஆகிய பல படங்களை தயாரித்துள்ளார். இவரது முதல் மனைவியான அனிதா 2017ல் மாரடைப்பு ஏற்பட்டு காலமானதை தொடர்ந்து இவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மகள் வற்புறுத்தி வந்தார். சமீபத்தில் தான் தில் ராஜூ தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து தற்போது அவரது மகளுக்கு ஒரு மகளும் உண்டு.
இந்த நிலையில் தற்போது தனது மகளின் வற்புறுத்தலின் காரணமாக ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் வைத்து 47 வயதான தில் ராஜூ தன்னை விட 20 வயது குறைந்த நடுத்தர வயது பெண்ணை நேற்றைய முன்தினம் திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காரணமாக திருமணத்தில் 20 அல்லது 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணை விடுத்துள்ளதால் இரு வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். தற்போது பல தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகின்றனர்.