#BREAKINGNEWS : 2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு ( Louise Glück) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS:
The 2020 Nobel Prize in Literature is awarded to the American poet Louise Glück “for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal.”#NobelPrize pic.twitter.com/Wbgz5Gkv8C— The Nobel Prize (@NobelPrize) October 8, 2020