#BREAKINGNEWS: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான மருத்துவதற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைட்டிஸ் சி வைரஸைக் (Hepatitis C virus. )கண்டுபிடித்ததற்காக ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹங்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS:
The 2020 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to Harvey J. Alter, Michael Houghton and Charles M. Rice “for the discovery of Hepatitis C virus.” pic.twitter.com/MDHPmbiFmS— The Nobel Prize (@NobelPrize) October 5, 2020