மக்கள் முதல் குத்துக்கு ஆதரவு தந்ததால் தான், இரண்டாம் குத்து உருவாகியுள்ளது என இயக்குனர் சேரன் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தோஷ் பி ஜெயக்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியான இருட்டுஅறையில்முரட்டுகுத்து எனும் படம் கலெக்ஷனை அள்ளி கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் குத்து எனும் படத்தை இயக்குனர் ஜெயக்குமார் அவர்கள் உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கான போஸ்டர் டீஸர் ஆகியவை மிக ஆபாசமாக இருப்பதாகவும், மக்கள் பார்க்கக் கூடிய படம் இல்லை எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் சேரன் அவர்கள் இந்தத் திரைப்படம் தொடர்பான தனது அதிருப்தியை அண்மையில் பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர் ஒருவர், இரண்டாம் குத்து படம் திரை உலகுக்கு கலங்கம் கொடுக்கிறது, என சேரனை டேக் செய்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற படங்கள் தான் தவறான பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுத்து தலைமுறைகளை சீரழிக்கிறது எனவும், திரை மீது இருக்கக்கூடிய மதிப்பை அழிப்பதாகவும் இதற்கு கண்டனம் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சேரன், மக்கள் இதுபோன்ற படங்களை புறம்தள்ளினாலே, இனி இது போன்ற படங்கள் உருவாகாது எனக் கூறியுள்ளார்.
ஏனென்றால், முதலில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்துக்கு கலெக்ஷனை அள்ளிக் கொடுத்ததால் தான் அப்படத்தை இயக்கியவர்களுக்கு தைரியம் வந்து, மக்கள் தற்பொழுதும் ஆதரவு தருவார்கள் என்பதற்காக அருவருப்பாக ஆபாசமாக இருந்தாலும் இரண்டாவது குத்து எனும் படத்தை தற்போது வெளியிட துணிந்து உள்ளனர். எனவே இதை வேரறுப்போம், மேலும் இதுபோன்ற படங்களை தடை செய்வோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…