பிரெண்ட்ஷிப் படக்குழுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னாவிற்கு ஹர்பஜன் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார்.
இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.பிளாக் ஷீப் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
நாளை திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! பிரெண்ட்ஷிப் ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. பிரெண்ட்ஷிப் டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க” என தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஹர்பஜன் சிங் ரெய்னாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் “நன்றி ரெய்னா தம்பி!! உங்களோட வாழ்த்துகள் ரொம்ப பிரமாதம்.மொத்த பிரெண்ட்ஷிப் டீமும் பயங்கர ஹாப்பி ! மனசார வாழ்த்து சொல்லுற அந்த வெள்ளை மனசு இருக்கே அதுனால தான நீங்க சின்ன தல.மறக்காம
நீங்களும் நம்ம சிஸ்கே பிள்ளைகள் எல்லாரும் பிரெண்ட்ஷிப் படம் பாருங்க..” என நன்றியை தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…